August 30, 2010

பால் கேக்

இந்த இனிப்பு, மிகவும் எளிதில் செய்யக்கூடியவை. இதற்கத் தேவையான பொருட்கள்:

பால்     - 1 லிட்டர்
சர்க்கரை - 400 கிராம்
நெய்     - 1 ஸ்பூன்
ரவை    - 1 ஸ்பூன்

ஒரு கனமான பாத்திரத்தில், மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேற்கவும். அடுப்பை மூட்டி அப்பாத்திரத்தை அதன்மீது வைத்து கிளரவும். அந்த கலவை தோசை மாவு பதத்திற்கு வந்ததும் கீழே இறக்கி கிளரவும். சற்று கெட்டியாக ஆனதும் அக்கலவையை ஒரு நெய் தடவிய தட்டில் ஊற்றி துண்டுகளாக வெட்டவும். பால் கேக் தயார்.

No comments:

Post a Comment