August 5, 2010

கி. ராஜநாராயணனின் “கதவு”

கோவில்பட்டியைச் சேர்ந்த கி. ராஜநாராயணன் அவர்கள் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களுள் ஒருவர். 1991 இல் இவரது “கோபல்ல கிராமத்து மக்கள்” என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார். இவரது முதல் பதிப்பு “மாயமான்”. இவரது பல கதைகள் கோவில்பட்டியைச் சுற்றியுள்ள கரிசல்காட்டை மையமாக வைத்து எழுதப்பட்டவையே.
கி.ராஜநாராயணன் அவர்களின் “கதவு” என்னை மிகவும் நெகிழவைத்த கதையாகும். இக்கதை சிறுவர்களின் உலகினைச் சித்தரிப்பதாக அமைந்துள்ளது. இக்கதையினை வாசிக்கும் எவரும் ஒருமுரையாவது தன் சிறு வயது நிகழ்வுகளுக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. குழந்தைகளின் உலகினை இயல்பு குறையாமல் காட்டுவது மிகவும் கடினம். ஆனால் கி. ரா வோ சிறுவர்களின் உலகினை சற்றும் இயற்கை மாறாவண்ணம் சித்தரித்துள்ளார். காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் அளவுக்கான தெளிவு கி.ரா வின் எழுத்துகளில் காணலாம்.

“ஒரு நாள் தெருவில் ஒரு தீப்பெட்டிப் படம் ஒன்றை லட்சுமி கண்டெடுத்தாள். படத்தில் ஒரு நாய் இருந்தது. அழுக்காக இருந்ததால் படத்தில் எச்சிலைத் துப்பி தன் பாவாடையால் துடைத்தாள்”

“எச்சில் துப்பி தன் பாவாடையால் துடைப்பது” என்பது பொதுவாகச் சிறுவர்கள் செய்யும் செய்கை. ஆனால் சிறுவர்களையும், அவர்கள் செய்யும் செய்கைகளையும் உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு மட்டுமே இத்துணை சிறப்பாக எழுத இயலும். பேச்சு வழக்கு தமிழ் உபயோகப்படுத்துவது இவரது படைப்புகளை இன்னமும் சிறப்பிக்கின்றன.

2 comments:

  1. Nice review. :) Look forward to more!

    ReplyDelete
  2. உங்கள் இனிய தமிழ் சேவை தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    - செந்தில்

    ReplyDelete