August 31, 2010

சீத பேதி மற்றும் வயிற்றுக் கடுப்பு நீங்க- Remedy for Dysentery

கசகசா லேக்கியம்:
> கசகசா- 50 கிராம்
> மாசிக் காய்- சிறிய அளவு
> ஜாதிக் காய்- சிறிய அளவு
மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை பால் சேர்த்து விழுது போல் அறைத்து வைத்துக்கொள்ளவும். அறைத்துவைத்த விழுதை அடுப்பில் ஏற்றி சற்று நேரம் கிளரவும். பின்னர் அதனை இறக்கி சிறிதளவு நெய்யும் தேனும் சேர்த்து கிளரி ஒரு சிறு டப்பிக்குள் பொட்டு வைத்துக்கொள்ளவும். இந்த லேக்கியத்தை தினமும் சிறிதளவு சாப்பிட்டுவர சீத பேதி (Dysentery), வயிற்றுக் கடுப்பு, மற்றும் பிற வயிறு சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.

No comments:

Post a Comment