September 27, 2010

”ரவா” தோசை- Rava dosai

சில தினங்களுக்கு முன்னர், வெளியூரில் உள்ள என் சித்தியோடு பேசலானேன். அப்பொழுது அவர்கள் எனக்குச் சொன்ன மிக எளிமையான சமையல் குறிப்புதான் இந்த “ரவா” தோசை குறிப்பு. இது சமையல் கற்றுக்கொள்பவர்களுக்கும் (beginners) கூட மிக எளிமையான குறிப்பாக அமையும் என நம்புகிறேன்.

இப்பொழுது இதற்குத் தேவையான பொருட்களைக் காணலாம்,
ரவா- 1 மேஜைக் கரண்டி
பச்சை மிளகாய்- காரத்திற்கேற்ப
கறிவேற்பிலை- சிறிதளவு
வெங்காயம்- சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
சீரகம்- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணை- சிறிதளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ரவையை நீரில் நனைத்து வைத்துக்கொள்ளவும். நீர் பசை இருந்தால் போதுமானது, அதிக நீரில் ஊரவைக்கத் தேவையில்லை. இது அரை மணி நேரம் ஊரினால் போதுமானது. அரை மணி நேரம் கழிந்ததும், ஊரவைத்த ரவையை ஒரு மிக்ஸியில் பொட்டு, மை போல் அரைத்தெடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயையும், கறிவேற்பிலையையும் தனியே அரைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு அரைத்த ரவை, பச்சை மிளகாய் விழுது இரண்டையும் செர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நீர் விட்டு, அதனுடன் சீரகம் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நருக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், அதனைத் தனியே ஒரு தட்டில் எடுத்துவைத்துக்கொள்ளவும்.
இந்த வெங்காயத்தையும் ரவா தோசை மாவுடன் சேர்த்து, தோசைக் கல்லில் தோசையாகச் சுட்டெடுக்கவும். ரவா தோசை தயார்!


குறிப்புகள்:
> ரவா தோசை மாவு கெட்டியாக இல்லாமல் நீர் போல் இருக்க வேண்டும்.
> வெங்காயம் விரும்பாதவர்கள், அதனை சேர்க்கத் தேவையில்லை.
> குடை மிளகாய் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
> சிறிதளவு அரிசி மாவு சேர்த்தால் தோசை கரகரப்பாக இருக்கும்.
> கரைத்த மாவை 2 மணிநேரம் கழித்து தோசையாக வார்த்தால் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment