November 20, 2010

மழை


மழை ஒரு தெய்வம்
தன்னலமற்ற பரம்
கண் கண்ட அகம்
கருணை மனம்
பணம் பாறா குணம்
நிலம் செழிக்கும் வரம்
வளம் நிறைக்கும் கரம்
இயற்கைச் சீதனம்!

மழை ஒரு தெய்வம். மழை ஒரு தன்னலமற்ற கடவுள். தன் பக்தன், தன் பக்தன்-அல்லாதவன், என்ற பாகுபாடுகள் இல்லாமல் எல்லோருக்கும் நலம் புரியும் ஒரு தன்னலம் கருதாத பரமாத்மா. அகம் என்பது உண்மையின் தோற்றம். நன்மை தீமைகளைக் கடந்த நிலை. ஒரு உயர்ந்த நிலை. மழை, நம் கண் கண்ட அகம். நம் கண் கண்ட மெய்ப்பொருள். தீயவனுக்கும் நலம் புரியும் ஒரு கருணை மனம். இந்த உலகத்தில் பணம் பாராது, நன்மைகள் பல தருவது மழை. நிலத்தை செழுமையாக்கும் மழை. நிலத்திற்கு மழை, ஒரு வரம். மழையின் கரம் பட்டதும், நஞ்சையும் புஞ்சையும் செழிக்கும். இப்புவியே ஒரு ஆனந்த நிலையமாக மாறும். மழை, இயற்கை நமக்களித்த ஒரு சீதனம்!

1 comment:

  1. Shruthi, lovely. :) Seedanam is a gift from your parents who love you unconditionally and wish you well. And to say rains are Nature's seedanam to us - wow lovely indeed :) Made my day!

    ReplyDelete